படிப்பதற்கு நன்றி

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

உலகின் மிகப்பெரிய ஆச்சரியமான உணவகம்! (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)


உலகின் மிகப்பெரிய உணவகம் என்ற பெருமையை எகிப்தின் கெய்ரோவில் உள்ள டிவோலி டோம் உணவகம் தட்டிச் சென்றுள்ளது.

இதை முடிவு செய்வதற்கான வைபவம் நவம்பர் 26 ஆம் திகதி இரவு இடம்பெற்றது. டிவோலி டோம் உணவகம் 5700 சதிர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.

இங்கு ஒரே நேரத்தில் 2100 பேர் அமர்ந்து உணவருந்தலாம். இன்னும் பலருக்கும் இடமுண்டு. தினசரி இங்கு சராசரியாக 7000 பேர் வருகை தருகின்றனர்.


(இலத்திரனியல் நுழை வாயில் பதிவுகள் மூலம் இது நிரூபணமாகியுள்ளது) வார இறுதிகளில் இது 9000 மாக அதிகரிக்கின்றது. ஒரே நாளில் இங்கு 10 ஆயிரம் பேர் வந்துள்ளமைக்கான பதிவுகளும் உள்ளன.

(பொது விடுமுறை தினமொன்றில்) இங்கு உலகப் புகழ் பெற்ற 16 சர்வதேச சிற்றுண்டிச் சாலைகள் அமைந்துள்ளன. கெய்ரோ நகரின் சமூக உயர்மட்டத்தினர் ஒன்று கூடும் ஒரு பிரபல இடம் இதுவாகும்.

அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே...... எனது இந்த ஆய்வில் குறைகள் இருக்குமானால் அது மனிதன் என்ற முறையில் என்னை சார்ந்தது.சுட்டிக்கடினால் திருத்திகொள்வேன். நிறைகள் இருக்குமானால் அண்ட அகிலங்களை எல்லாம் படைத்துப் பரிபாலிக்கும் ஏக இறைவனைச் சார்ந்தது .அவனுக்கே புகழ் அனைத்தும் . pudumadamonlinenet@yahoo.com

திருக்குர்ஆனை விரும்பிய மொழியில் படிக்க