படிப்பதற்கு நன்றி

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

தனிப் பள்ளி .?


தனிப் பள்ளி .?




அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்…….
அன்பிற்கினிய புதுமடம் வாழ் இஸ்லாமிய மக்களே! நமதூரில் மூன்று பள்ளிவாயில்கள் இருக்க

நான்காவதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  இதனால் 1767 சதுர அடி அளவுள்ள ஒரு இடத்தை விலைபேசி பதிவு செய்துள்ளோம் அதிலே மேல்தளமும் அமைத்துக் கட்டுவது  . இதனால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஊரை இரண்டாக பிரிப்பதாக.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மூன்றாவது  பள்ளி இருக்க நான்காவதாக ஒரு பள்ளியை கொண்டுவருவதின் அவசியத்தை எந்த ஒரு ஜமாஅத்தையும் சாராமல் நடுநிலை மனதோடு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் உங்கள் முன் வைக்கிறோம்.
பள்ளிவாயில் என்றடவுன் நாம் நினைப்பதை போன்று மனராக்கள் இருக்க வேண்டும். தொழுகை நடக்க வேண்டும். என்பது மட்டும் அல்லாஹ்வின் பார்வையில் கிடையாது. அல்லாஹ் அந்த பள்ளிவாயிலுகளுக்கென்று சில தகுதிகளையும் குர்ஆனில் கூறுகிறான். எந்த பள்ளி தொழுவதற்கு தகுதியானது.  எந்த பள்ளி தொழ தகுதியற்ற வெறும் கட்டிடத்தை போன்றது என்று பள்ளிவாயில்களை இரண்டாக பிரிக்கிறான்.
அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்
இடையூறளிப்பதற்காகவும், (ஏக இறைவனை) மறுப்பதற்காகவும், நம்பிக்கை கொண்டோரிடையே பிரிவை ஏற்படுத்திடவும், இதற்கு முன் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராகப் போரிட்டோருக்கு அடைக்கலமாகவும் ஒரு பள்ளிவாசலை ஏற்படுத்திக் கொண்டோர் ”நாங்கள் நல்லதைத் தவிர வேறெதனை யும் நாடவில்லை” என்று சத்தியம் செய் கின்றனர். ”அவர்கள் பொய்யர்களே” என்று அல்லாஹ் சாட்சி கூறுகிறான். முஹம்மதே!) அதில் நீர் ஒரு போதும் வணங்காதீர்! நாள் முதல் இறையச்சத்தின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசலே நீர் வணங்குவதற்குத் தகுதியானது. அதில் தூய்மையை விரும்பும் ஆண்கள் உள்ளனர். அல்லாஹ் தூய்மையானவர்களை விரும்புகிறான்
(அல்குர்ஆன் 9: 107, 108)
இந்த வசனத்தில் தகுதியற்ற ஒருபோதும் தொழக்கூடாத பள்ளிகளுக்கு நான்கு தகுதிகளை கூறுகிறான். 1. இடையூறளித்தல் 2. அல்லாஹ்வை மறுத்தல் 3. நம்பிக்கை கொண்டோரை பிரித்தல் 4. அல்லாஹ்வையும் அவனது தூதரையும் எதிர்த்தவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தல்
அந்த பள்ளிகளில்  நான்கு காரணங்களில்  ஒரு காரணம் இருந்தாலும் அது தொழ தகுதியற்ற பள்ளியாகிவிடுகின்றது. நம்முடைய பள்ளிகள் இரண்டிலும் தொழுகைக்கு சென்றால் இடையூறளிக்காத காரணம் இல்லையே தவிர மற்ற அனைத்து காரணங்களும் சர்வசாதரணமாக காணப்படுகின்றது.
அல்லாஹ்வை மறுக்கும் பள்ளிகள்
பள்ளிகளில் மவ்ளூ­த் என்ற பெயரில் அல்லாஹ்வோடு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் முகைதீன் அப்துல் காதர் ஜெய்லானியையும் இணையாக்கி அல்லாஹ்வை மறுக்கும் பள்ளிகளாக மாறுகின்றன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அகிலத்தின் அதிபதியான அல்லாஹ்வோடு ஒப்பிடும் அவலநிலை
أنت غفار الخطايا    والذنوب الموبقات        كفروا عني ذنوبي    واعف لي عن سيئات
ومغيث الناس من الوهج    وأنت حقا غياث الخلق أجمعهم
நபியே! மிகப்பெரும் பாவங்களை மன்னியுங்கள்! மக்களை நரக நெப்பி­ருந்து காப்பாற்றுபவர் நீங்கள் தான்! நீங்கள் அனைத்து படைப்பினங்களை உண்மையில் காப்பாற்றுவீர்!
அல்லாஹ்விடத்தில் கேட்க வேண்டியதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடத்தில் மவ்ளூ­தில் கேட்கிறார்கள்.
அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்
தங்களுக்கு தாங்களே தீங்கிழைத்து கொண்ட என் அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழந்துவிதீர்கள். அல்லாஹ் எல்லா பாவங்களையும் மன்னிக்கிறான். அவன் தான் மன்னிப்பவன் கருணையாளன்
(அல் குர்ஆன் 39:53)
அல்லாஹ் தன்னிடத்தில் பாவமன்னிப்பு தேட வேண்டும் என்று கேட்கிறான் ஆனால் மவ்­ளூதை ஓதி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ்வுக்கு  இணையாக்கிறார்கள்.
அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்
யாருக்கு எதிராக வேதனை பற்றிய கட்டளை உறுதியாகி விட்டதோ அவனா? (சொர்க்கம் செல்வான்?). நரகத்தில் உள்ளவனை நீர் விடுவிப்பீரா? (அல் குர்ஆன் 39:19)
ஒருவனுக்கு நரகம் என்று அல்லாஹ் முடிவு செய்துவிட்டால் அவனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களாலேயே காப்பாற்ற முடியாது என்று அல்லாஹ் கூறுகிறான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ்வை விட மேலாக்கி  நரகத்தி­ருந்து காப்பாற்றவேண்டும் என்று  மவ்­ளூதில் கேட்கிறார்கள்.
இன்னும் நமதூரில் உள்ள பள்ளிகளுக்கு எழுதப்படாத ஒரு பெயர் இருக்கிறது. அது தான் முஹைதீன் ஆண்டவர் பள்ளி. அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமான பள்ளிகளை முஹைதீன் என்ற தனிமனிதருக்கு சொந்தமாக்கியேதாடு மட்டுமல்லமாமல் அவரை ஆண்டவர் என்றளவுக்கு உயர்த்துவிடுகின்றனர். இவர்களுடைய பார்வையில் ஆண்டவராக இருக்கும் முஹைதீனுக்கு உரிமையான பள்ளியில் அல்லாஹ்வை தொழவதா? அல்லாஹ்வை மட்டும் வணங்குவதற்காக கட்டப்பட்ட பள்ளியில் தொழுவதா? சற்று சிந்திப்பீர்!
நம்பிக்கை கொண்டோரை பிரிக்கும் பள்ளிகள்
அல்லாஹ்வையும் தூதரையும் பின்பற்றும் நம்பிக்கைகொண்ட முஸ்­ம்களை ஷாஃபீ என்றும் ஹனஃபீ என்றும் பிரித்து ஓரே அல்லாஹ்வை வணங்க கட்டப்பட்ட பள்ளிவாயி­ல் ஜாதி பிரிவை போன்று அவர்களுக்கென்று பல்வேறு தொழுகை முறைகளையும் பிரிக்கிறார்கள்.
அல்லாஹ்வையும் அவனது தூதரையும் எதிர்த்தோர்க்கு அடைக்கலம் கொடுக்குமிடம்
அல்லாஹ்வும் அவனது தூதரும் தடுத்த காரியமான இலட்சக்கணக்காக வரதட்சனை வாங்குவோருக்கு திருமணம் முடித்து கொடுக்கப்படும் அடைக்கலமளிக்குமிடமாக தான் அந்த பள்ளிகள் விளங்குகின்றன.( இதே அரசு சார் பதிவாளர் அலுவலகத்தில் இந்த திருமணம் நடந்தால் மணமகன் சிறைவாசகத்தை அனுபவிக்க வேண்டியது தான்) இவ்வாறு குற்றவாளிகளுக்கு அடைக்கலம­ளிக்கும் இடமாக பள்ளிவாயில் மாறியுள்ளது.
இன்னும் மார்க்கத்தை விளங்காத சிலர்  முனாஃபிக்குகள் கட்டிய பள்ளிவாயிலை  தான் அல்லாஹ் கூறுகிறான். இது நம்முடைய காலத்திற்கு பொருந்தாது என்று கூறுகின்றனர். அப்படியென்றால் நாம் அவர்களிடத்தில் கேட்கிறோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த காலத்தில் மக்கா காஃபிர்கள் செய்த சிலை வழிபாட்டை தான் எதிர்த்து பிரச்சாரம் செய்தார்கள். அதற்காக நாம் இந்த காலத்தில்  உள்ள சிலை வழிபாட்டை எதிர்த்து பிரச்சாரம் செய்யக் கூடாது.  இந்த காலத்தில் சிலை வழிபாடு கூடும் என்று நீங்கள் சொல்வீர்களா? இதெல்லாம் ஒரு வாதமா? இஸ்லாமிய மார்க்கம் என்பது எல்லா காலத்திற்கும் பொருந்தும் எல்லா காலகட்டத்திலும் சிலை வழிபாட்டை எதிர்த்து பிரச்சாரம் செய்வது மார்க்கத்தில் கட்டாயமோ அதை போல அந்த காலத்தில் எந்த காரணங்கள் உள்ள பள்ளிவாயி­ல் தொழக்கூடாது என்று அல்லாஹ் கூறியிருக்கிறானோ அது இந்த காலத்தில் முஸ்­ம்கள் கட்டிய பள்ளிகளுக்கும் பொருந்தும். அல்லாஹ் அந்த குர்ஆன் வசனத்தில் முனாஃபிக்குகள் கட்டிய பள்ளி முஸ்­லிம்கள் கட்டிய பள்ளி என்றெல்லாம் பிரிக்கவில்லை. எந்த பள்ளியில் தொழுவது கூடாது என்ற காரணங்களை தான் கூறுகிறான்.
இந்த காரணங்களையுடைய பள்ளிகளில் தொழக்கூடாது என்பது அல்லாஹ்வின் கட்டளை. இதனால் தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இந்த காரணங்களெல்லாம் இல்லாமல் அல்லாஹ் குர்ஆனில் கூறியிருப்பதை போன்று அல்லாஹ்வை பயந்து வணங்க வேண்டும் என்ற ஓரே காரணத்திற்காக மட்டும் இந்த இடத்தை 1767 சதுர அடி அளவுள்ள ஒரு இடத்தை விலைபேசி பதிவு செய்துள்ளோம் அதிலே மேல்தளமும் அமைத்துக் கட்டுவது  . ஊரை பிரிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக இல்லை. அல்லாஹ்வின் கட்டளைகளை செயற்படுத்துவதற்காக
 .http://www.onlinepj.com/kelvi_pathil/thozukai_kelvi/shrkana_palliyi_thozalama/ http://www.onlinepj.com/kelvi_pathil/thozukai_kelvi/p_5/

அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே...... எனது இந்த ஆய்வில் குறைகள் இருக்குமானால் அது மனிதன் என்ற முறையில் என்னை சார்ந்தது.சுட்டிக்கடினால் திருத்திகொள்வேன். நிறைகள் இருக்குமானால் அண்ட அகிலங்களை எல்லாம் படைத்துப் பரிபாலிக்கும் ஏக இறைவனைச் சார்ந்தது .அவனுக்கே புகழ் அனைத்தும் . pudumadamonlinenet@yahoo.com

திருக்குர்ஆனை விரும்பிய மொழியில் படிக்க