படிப்பதற்கு நன்றி

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

உலக நாடுகளின்


கோக கோலா உற்பத்தி பார்மூலா .......!!!!                                                                                                                    
உலக நாடுகளின் பொது குளிர்பானமாக கொடி கட்டி பறக்கும் கோக
கோலாவின் 125 ஆண்டு தயாரிப்பு ரகசியத்தை (பார்முலா) அதிரடியாக ஒரு இணைய தளம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உலகம் முழுவதும் 200 நாடுகளில் கோக கோலா, பெப்சி இருக்கின்றன. இரண்டுமே அமெரிக்காவை சேர்ந்த நிறுவனங்கள். கோலா தொடங்கப்பட்டது 1886ல். 125 ஆண்டுகளாக உள்ளது. உணவு, குளிர்பான தயாரிப்புகளின் லேபிளில் உள்ளடக்கம் வெளியிடுவது கட்டாயம்.

எனினும், ‘காபைன் கலந்த இயற்கை சுவை கூட்டல்’ பொருட்கள், சர்க்கரை, தண்ணீர், நிறமிகள் என்று மட்டுமே கோலாவில் அச்சிடப்படும். அந்த இயற்கை சுவை கூட்டலில் என்ன பார்முலா என்பது ரகசியம். அதை www.thisamericanlife.org என்ற இணைய தளம் இப்போது வெளியிட்டுள்ளது. 


இந்த பார்முலா எழுதப்பட்ட காகிதத்தை அமெரிக்க வங்கி லாக்கரில் பாதுகாக்கிறது கோலா நிறுவனம்.அதுதான் இது என இணைய தளம் வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

ஏற்கனவே, 1979ல் ஜார்ஜியா மாநில உள்ளூர் நாளிதழ் ஒன்றில் இது வெளியானதாக தெரிகிறது. ஆனால், இப்போது இருப்பதுபோல கோக கோலாவின் புகழ் அப்போது பெரிதாக இல்லை என்பதால் அந்த செய்திக்கு முக்கியத்துவம் இல்லாமல் போனது.


அவ்விணையத்தளம் வெளியிட்டுள்ள கோக கோலா உற்பத்தி பார்மூலா இவைதான்.

Fluid extract of Coca 3 drams USP 
Citric acid 3 oz 
Caffeine 1oz 
Sugar 30 (it is unclear from the markings what quantity is required) 
Water 2.5 gal 
Lime juice 2 pints 1 qrt 
Vanilla 1oz 
Caramel 1.5oz or more to colour 
7X flavour (use 2oz of flavour to 5 gals syrup): 
Alcohol 8oz 
Orange oil 20 drops 
Lemon oil 30 drops 
Nutmeg oil 10 drops 
Coriander 5 drops 
Neroli 10 drops 
Cinnamon 10 drops
அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே...... எனது இந்த ஆய்வில் குறைகள் இருக்குமானால் அது மனிதன் என்ற முறையில் என்னை சார்ந்தது.சுட்டிக்கடினால் திருத்திகொள்வேன். நிறைகள் இருக்குமானால் அண்ட அகிலங்களை எல்லாம் படைத்துப் பரிபாலிக்கும் ஏக இறைவனைச் சார்ந்தது .அவனுக்கே புகழ் அனைத்தும் . pudumadamonlinenet@yahoo.com

திருக்குர்ஆனை விரும்பிய மொழியில் படிக்க