படிப்பதற்கு நன்றி

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

பிறைபார்க்காமலேயே


15-11-2010 அன்று தெற்க்கு தெருவிற்கு தொழுகைக்கு சென்ற மாணவர்களிடம் 18-11-2010 அன்று பெருநாள் கொண்டாடுவதற்கு என்ன ஆதாரம் என்று அங்கே உள்ள இமாம்கள் கேட்க அதற்கு மாணவர்கள் தவ்ஹீத் ஜமாத்திடம் வந்து தெற்கு தெரு ஜமாஅத்தில் வந்து விளக்கம் அளிக்கும் படி கூறினார்கள்.



இதனை அடுத்து தவ்ஹீத் ஜமாஅத் புதுமடம் கிளை செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோர் 15-11-2010 அன்று மஃரிப் தொழுகைக்கு பின் தெற்கு தெரு பள்ளிக்கு சென்று மாணவர்களிடம் கேட்கபட்ட கேள்விகள் குறித்து விளக்கம் அளித்தனர்.


அப்பொழுது பேசிய இமாம்களும், நிர்வாகிகளும் முதலில் தாங்கள் பிறையை பார்த்ததாக கூறினர்.


பின் அதை அழுத்தமாக நாம் கேட்ட பொழுது நாங்கள் பார்க்க வில்லை. டவுன் ஹாஜி பார்த்தார் என்று கூறினர்.


டவுன் ஹாஜியோ மகாராஷ்ட்ர மாநிலத்தில் பார்த்தாக கூறுகிறார் .

(கடந்த முறை கேரளாவில் பிறை பார்த்து நோன்பு துவங்கிய பொழுது இதே டவுன் ஹாஜி தமிழகத்தில் பிறை பார்த்தால் தான் நோன்பு துவங்க வேண்டும் என்று கூறி நோன்பை மறுநாள் துவங்கினார். ஆனால் இப்பொழுது கர்நாடகத்தை தான்டி மகாராஷட்டிராவில் பார்த்ததாக கூறி பெருநாளை கொண்டாடுகின்றனர்).


இப்படி பிறையை தமிழகத்தில் யாருமே பார்க்கமால் 17-11-2010 அன்று பெருநாள் கொண்டாடுவதற்கு எந்த ஆதராமல் இல்லாமல் செய்வது நபி வழியை குழி தோண்டி புதைக்கும் வகையில் பெருநாள் ஏற்பாட்டை செய்துள்ளனர்


அப்பொழுது இந்த விவாதம் நடந்து கொண்டு இருக்கும்பொழுது

பொழுது பள்ளி அருகாமையில் ஏராளமான பெண்கள் திரண்டனர்.


அவர்கள் தெற்கு தெரு ஜமாஅத்திற்கு ஆதரவாக நாங்கள் திங்கள் கிழமை பிறை பார்த்தோம் என்று கூறினர்.


திங்கள் கிழமை(08-11-2010) பிறை பார்த்தால் வியாழகிழமைதான்(18-11-2010) பெருநாள் கொண்டாட வேண்டும் என்ற தெரியாமல் இருக்கும் இவர்களின் அறியாமைதான் சுன்னத் ஜமாஅத்தின் மூலதனமாக உள்ளது.

அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே...... எனது இந்த ஆய்வில் குறைகள் இருக்குமானால் அது மனிதன் என்ற முறையில் என்னை சார்ந்தது.சுட்டிக்கடினால் திருத்திகொள்வேன். நிறைகள் இருக்குமானால் அண்ட அகிலங்களை எல்லாம் படைத்துப் பரிபாலிக்கும் ஏக இறைவனைச் சார்ந்தது .அவனுக்கே புகழ் அனைத்தும் . pudumadamonlinenet@yahoo.com

திருக்குர்ஆனை விரும்பிய மொழியில் படிக்க