படிப்பதற்கு நன்றி

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

மதுப்பழக்கத்துக்கு காரணம் மரபணு!


ஒருவருடைய தொடர் மதுப்பழக்கத்துக்கு மரபணுவும் காரணம் என்கிறது மருத்துவ அறிவியல். ஏனெனில் மது செரிமானம் ஆவதற்கு உதவும் நொதிப் பொருளில் அடங்கியுள்ளது மரபணு மர்மம்! மரபணுக்கள்தான் உடலின் தோற்றத்தையும், இயக்கத்தையும் கட்டுப்படுத்தும் உன்னத சக்தியாக உள்ளன. உடல் என்பது மரபணுக்களால் உருவாக்கப்படும் ஒரு நிரந்தரமற்ற மாயத் தோற்றம்.

இன்று நமது உடலில் வாழும் நகல் மரபணுக்கள், 600 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 20 தலைமுறைகளுக்கு முன்பு 10 லட்சத்து 48 ஆயிரத்த்டு 576 முன்னோர்களின் உடலில் வாழ்ந்திருக்கின்றன! மதுவுக்கு அடிமையாகும் நிலை, மரபணுவால் தீர்மானிக்கப்படும் ஒரு மரபியல் நோயாகும். மதுவை சாப்பிட்ட பிறகு, அது செரிமானமாவதற்கு ஆல்கஹால் டிகைடிரோஜெனேஸ் எனும் நொதிப் பொருள் தேவை. இந்த நொதிப் பொருளை உருவாக்கும் மரபணுக்களில் இரண்டு வகைகள் உள்ளன.

நமது நாட்டில் 60 சதவீதம் மனிதர்களுக்கு குடிப்பழக்கத்துக்கு அடிமையாக வைக்கும் மோசமான மரபணு வகை இருக்கிறது. ஆனால் ஜப்பான், கொரியா, சீனா போன்ற மங்கோலிய இனத்தவர்கள் வாழும் நாடுகளில் மதுவுக்கு அடிமையாவதைத் தடுக்கும் நல்ல வகை மரபணு பெரும்பாலானவர்களுக்கு இருக்கிறது. குழந்தைப் பருவத்திலேயே இத்தகைய தீய மரபணு இருப்பவர்களைக் கண்டுபிடித்து அவர்களை மதுவை தொடாமலேயே இருக்கும்படி எச்சரிக்கை செய்தால் மதுவுக்கு அடிமையாவதை தடுத்து விடலாம்.

அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே...... எனது இந்த ஆய்வில் குறைகள் இருக்குமானால் அது மனிதன் என்ற முறையில் என்னை சார்ந்தது.சுட்டிக்கடினால் திருத்திகொள்வேன். நிறைகள் இருக்குமானால் அண்ட அகிலங்களை எல்லாம் படைத்துப் பரிபாலிக்கும் ஏக இறைவனைச் சார்ந்தது .அவனுக்கே புகழ் அனைத்தும் . pudumadamonlinenet@yahoo.com

திருக்குர்ஆனை விரும்பிய மொழியில் படிக்க