![]() லண்டனில் உள்ள வார்ன்டன், தொடக்கப்பள்ளியில் படிக்கும் கால்லி (6), கெதின் (5) ஆகிய குழந்தைகளுக்கு இந்த திருமணம் நடந்தேறியது.வழக்கத்துக்கு மாறான இந்த திருமண சடங்குகள் வொர்செஸ்டர் பாரிஸ் தேவாலயத்தில் நடந்தது. இதில் பாதிரியார் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தினார். திருமணமும் பதிவு செய்யப்பட்டது. இந்த திருமணத்தில் இரு குழந்தைகளின் பெற்றோரும் கலந்து கொண்டனர். இவர்கள் திருமணம் செய்ய தேவாலயத்துக்கு செல்ல எவர்சொடைல் கார் பரிசளிக்கப்பட்டது. இதற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன. திருமணம் என்றால் என்ன? அது எப்படி நடைபெறுகிறது என்பன போன்றவற்றை அறிந்து அது குறித்து கட்டுரை எழுதுவதற்காக இதுபோன்ற திருமணத்தை நடத்தியதாக பள்ளியின் துணை தலைவர் சாரா ஆலன் தெரிவித்தார். திருமணம் நடைபெறுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு இரு குழந்தைகளையும் அழைத்து ஆசிரியர்கள் திருமண ஒத்திகை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி . maalaimalar.com |
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அல்லாஹ்வுக்கும், (அவன்) தூதருக்கும் கீழ்படியுங்கள் நீங்கள் (அதனால் அல்லாஹ்வினால்) கிருபை செய்யப்படுவீர்கள். குர்ஆனை(३.132 ) PUDUMADAMONLINENET@yahoo.CO M
படிப்பதற்கு நன்றி
இங்கிலாந்தில் பள்ளி குழந்தைகளுக்கு திருமணம்
உலகின் மிகப்பெரிய ஆச்சரியமான உணவகம்! (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
மதுப்பழக்கத்துக்கு காரணம் மரபணு!
பலஸ்தீனத்திற்குள் இஸ்ரேல் அத்துமீறல்
பலஸ்தீனத்திற்குள் இஸ்ரேல் அத்துமீறல் : பள்ளிவாசல் அழிப்பு படத்தை கிளிக் செய்க (வீடியோ இணைப்பு) |
மேற்குக்கரையில் உள்ள பலஸ்தீன கிராமமொன்றில் இருந்த பள்ளிவாசல் ஒன்றையும், கட்டிடங்கள் சிலவற்றையும் இஸ்ரேலிய இராணுவம் இடித்து அழித்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.00 மணியளவில் சுமார் 200 சிப்பாய்கள் மற்றும் 3 புல்டோசர் வாகனங்கள் ஆகியன 'கிர்பர்ட் யார்சா' என்ற மேற்படி கிராமத்திற்குள் புகுந்து இவற்றை அழித்ததாக அக்கிராம வாசிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் சுமார் 90,000 அமெரிக்க டொலர் வரை நட்டமேற்படுள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த இஸ்ரேல் மேற்படி பகுதி தமது இராணுவத்திற்குரியதென்றும் பொதுமக்களுக்கு பாதுகாப்பற்றதெனவும் தெரிவித்துள்ளது.
இச்சம்பவமானது இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்திற்கிடையிலான முறுகல் நிலையை மேலும் அதிகரித்துள்ளது.
குளிர்காலத்தில் இருமலா?

பிரிட்டனில் தற்போது ஏற்பட்டு வரும் சீதோஷ்ண நிலை மாறுபாட்டால் பலர் ஜலதோஷம் , இருமலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக குளிர்காலங்களில் உண்டாகக் கூடிய பலவிதமான நோய்களும் பரவத் தொடங்கியுள்ளதால் இருமலே அனைத்து நோய்களும் மோசமாவதற்கான முதல் அறிகுறி என்பதை புரிந்து கொண்டு மக்கள் மெத்தனமாக இல்லாமல் உடனடியாக பொதுநல மருத்துவரை அணுக வேண்டும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இருமல் தொடர்பான மருந்துகளை வாங்க வரும் மக்களை கண்காணித்து உடனடியாக அவர்களை மருத்துவரை அணுகச் சொல்லுமாறு நாடு முழுதும் உள்ள மருந்துக் கடைகளுக்கும் மருத்துவ சங்கங்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
நீண்ட நாள் இருமல் இருந்தால் அது புற்றுநோயின் அறிகுறியாக இருப்பதற்கு வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதால் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று ஆரம்ப கால காட்டங்களிலேயே சிகிச்சை எடுத்துக் கொண்டால் நோயின் தீவிர பாதிப்பிலிருந்து தப்பலாம் எனவும் மருத்துவர்கள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறபப்ட்டுள்ளது.
தற்போது பிரிட்டனில் பல ஆயிரக்கணக்கான மக்கள் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு முழுமையாக குணப்படுத்த முடியாத சூழ்நிலைக்குச் சென்றுள்ளதும் , ஆரம்ப கால கட்டங்களிலேயே இவர்கள் மருத்துவர்களை அணுகியிருந்தால் குணப்படுத்தியிருக்க முடியும் எனவும் நிபுணர்கள் மேலும் கூறியுள்ளனர்.
வரதட்சணை
இத்தகைய கொடூரமான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரணத்தண்டனை விதிக்கவேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவித்தது.
நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு, ஞான் சுதா மிஷ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இத்தீர்ப்பை வழங்கியது. இதுவரை வரதட்சணை மரணங்களுக்கு அதிகபட்சமாக ஆயுள்தண்டனை மட்டுமே வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
நன்றி .செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
சிறுநீரக நோயை குணப்படுத்தும் மாதுளம் பழச்சாறு

இதற்காக டயாலிஸிஸ் செய்வதற்கு முன்பாக சில சிறுநீரக நோயாளிகளுக்கு மாதுளம் பழச்சாறு அல்லது புரதச்சத்து அதிகம் உள்ள பிளாஸ்போ பானம் கொடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. மாதுளம் பழச்சாறு சிறுநீரக பாதிப்பையும், பக்கவிளைவான இதய நோயையும், சாவு விகிதத்தையும் குறைப்பது தெரியவந்தது.
ஏனெனில், மாதுளம் பழச்சாறு அருந்தியவர்கள் உடலில் இருந்த தீங்கு விளைவிக்கும் பொருள்களை மாதுளம் பழச்சாறில் உள்ள ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் செயல் இழக்கச் செய்ததால் அவர்கள் நோயின் பாதிப்பு மட்டுப்பட்டதாக உணர்ந்தனர். இருப்பினும், இந்த சோதனையை இன்னும் பலரிடம் செய்துபார்ப்பது நல்லது என வெஸ்டன் கலிலி மருத்துவமனையில் இந்த ஆய்வை நடத்திய தலைமை மருத்துவ நிபுணர் பட்யா கிறிஸ்டல் தெரிவித்தார்.
இந்த செய்தியை டெய்லி எக்ஸ்பிரஸ் நாளேடு வெளியிட்டுள்ளது. மாதுளம் பழம் சாப்பிட்டால் ரத்தக்கொதிப்பு, கொழுப்புச்சத்து குறையும், ஆண்மை பெருகும், வெயிலால் ஏற்படும் தோல் சம்பந்தமான நோய்கள் கட்டுக்குள் இருக்கும் என ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ளது.
புராஸ்ட்ரேட் புற்று நோயை மாதுளம் பழம் குறைக்கும் என அமெரிக்காவில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்விலிருந்து கண்டறியப்பட்டது நினைவுகூறத்தக்கது.
கமரா லேசர் ஒளிக்கற்றைகள் சுவர் போன்ற
நேர்கோட்டுப் பாதையில் இல்லாத பொருட்களைப் படம் பிடிக்க கமரா கண்டுபிடிப்பு |
![]() இந்தக் கமராவில் இருந்து வெளியாகும் லேசர் ஒளிக்கற்றைகள் சுவர் போன்ற வஸ்துக்களில் தெறித்து, படம்பிடிக்கப்பட வேண்டிய பொருளை ஒளிரச் செய்யும். அந்த ஒளிர்வின் மூலம் சுவர் போன்ற வஸ்துக்களில் தெறிக்கும் பிம்பங்களைப் பதிவு செய்வது கமராவின் தொழில்நுட்பமாகும். இதன் மூலம், அறையின் வெளியே இருக்கும் கமராவின்; மூலம்; அறையின் உள்ளே இருக்கும் பொருளை படம் பிடிக்கலாம். இது எக்ஸ் கதிர்கள் இல்லாமல் எக்ஸ்-ரே படம் பிடிக்கும் தொழில்நுட்பம் போன்றதாகுமென மசசூசெட்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் ரமேஷ் ரஸ்கர் தெரிவித்தார். |
சிறுநீரகக் கல் உருவாவது எப்படி?
சிறுநீரகக் கல் உருவாவது எப்படி? |
[ திங்கட்கிழமை, 01 நவம்பர் 2010] |
உடலில் எந்த இடத்திலும் கல் உருவாகலாம். சிறுநீர் பையில், சிறுநீரகத்தில், சிறுநீர் பாதையில் கல் உருவாவது சகஜம். இந்தியாவில் 80 லட்சம் மக்கள் வரை, இந்த உபாதையால் பாதிக்கப்படுகின்றனர். 'கிட்னி ஸ்டோன்’ என்பதால், அது சிறுநீரகத்தில் மட்டும் தான் ஏற்படும் என்று கருதக் கூடாது. சிறுநீரை வெளியேற்றக் கொண்டு செல்லும் பாதையில் ஏற்படலாம். சிறுநீரைத் தேக்கி வைக்கும் பையில் ஏற்படலாம். சிறுநீரை வெளியேற்றும் இறுதி உறுப்பில் ஏற்படலாம். மிகச்சிறிய கல்லாகவும் தோன்றலாம்; ஒரு எலுமிச்சை அளவுக்கும் ஏற்படலாம். கல்லின் அளவு பொறுத்து, வலியின் தீவிரம் இருக்கும் எனக் கருதுவது தவறு. பெரிய கல், வலியே இல்லாமல் வளரலாம். கண்ணுக்கே தெரியாத சிறிய கல், அதிக வலி கொடுக்கலாம். கல் உருவாவதால் ஏற்படும் வலியை, பிரசவ வலியோடு ஒப்பிடலாம். எவ்வளவு பெரிய பலசாலியையும் ஆட்டிப் போட்டு விடும் இந்த வலி. சிறுநீர் செல்வதில் சிரமம் ஏற்படுவதில் துவங்கி, இருபக்க இடுப்பின் பின் பக்கத்திலிருந்து அலை போல வலி உருவாகி, பிறப்புறுப்பு வரை பரவும். சிரமப்பட்டு வெளியேற்றப்படும் சிறுநீர் அதிக மஞ்சள் நிறத்துடன் காணப்படும். சிலருக்கு சொட்டு சொட்டாகவும் வெளியேறும். இதனால் தொற்று ஏற்பட்டால், காய்ச்சல் உண்டாகும். வெப்ப பகுதிகளில் வசிப்போருக்கு, உடலில் நீர்சத்து குறையும் போது, இதுபோன்று கற்கள் அடிக்கடி ஏற்படும். 40 – 60 வயதுள்ள ஆண்களிடையே இந்த உபாதை அதிகம் காணப்படுகிறது. பரம்பரையாகவும் இது ஏற்படலாம். கல் உருவாகி, சிகிச்சை எடுத்து கொண்டோரில் 50 சதவீதத்தினருக்கு, 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கல் தோன்ற வாய்ப்பு உண்டு. உடலில் உள்ள மொத்த ரத்தமும், சிறுநீரகம் வழியே செல்கிறது. ரத்தத்திலிருந்து நீரையும், ரசாயனங்களையும், சிறுநீரகம் பிரிக்கிறது. ரசாயனங்கள் கல் ஆகாமல் இருக்க, சிறுநீரகமும் சில கரைப்பான்களை சுரக்கிறது. அதையும் மீறி தோன்றும் சிறு கல்கள், ஒன்றாகச் சேர்ந்து பெரிய கல்லாக உருவாகி விடுகின்றன. சிறுநீரகத்தில் கரைப்பான்கள் சுரப்பதில், பரம்பரையாகத் தடை கொண்டவர்களுக்கு, கல் உருவாவது சகஜம். அடிக்கடி தொற்று ஏற்பட்டாலோ, சிறுநீர் அடர்த்தியாக இருந்தாலோ, அடிக்கடி வெகுநேரம் சிறுநீரை அடக்குபவர்களுக்கோ கூட, கரைப்பான்கள் சுரப்பதில் பிரச்னை ஏற்படும். மூட்டு வீக்கத்தால் பாதிக்கப்படுபவர்களின் உடலில் உப்பு அதிகம் சுரப்பதாலும், சிறுநீரகத்தில் கல் உருவாகும். எந்த அறிகுறியும் தெரியாத சிறுநீரகக் கல்லை, அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் அல்லது எக்ஸ்-ரே எடுத்து பார்த்து அறிந்து கொள்ளலாம். வலி போன்ற பொதுவான அறிகுறிகளைச் சொன்னாலே, கல் இருக்கிறதா என்பதை பரிசோதிக்க, இது போன்ற பரிசோதனைகளை எடுக்குமாறு, டாக்டர் பரிந்துரைப்பார். சில நேரங்களில், ஐ.வி.பி., என்ற, நரம்பில் சாயம் ஏற்றி, கல் இருக்கும் இடத்தையும், அதன் அளவையும் கண்டறியும் பரிசோதனையும் செய்யப்படுகிறது. கற்களை நீக்க, பெரும்பாலான நேரங்களில் கடுமையான சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. நாள் ஒன்றுக்கு, நான்கைந்து லிட்டர் தண்ணீர் குடிப்பவருக்கு, சிறுநீரகத்தில் கல் இருந்தாலும், சிறுநீர் மூலம் வெளியேறி விடும். வலி ஏற்பட்டால், வலி நிவாரணி மாத்திரைகள் சாப்பிடலாம். கல்லில் உள்ள ரசாயனங்கள் குறித்து அறிந்து கொண்டால், அதை வைத்து, மருந்து, உணவுக் கட்டுப்பாடுகளை டாக்டர் பரிந்துரைப்பார். தொடர்ந்து கடும் வலி, மிகப்பெரிய கல் ஆகியவை இருந்தால், அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே அதை அகற்ற முடியும். கல் வளர்ந்து கொண்டே இருப்பது, தொடர் தொற்று ஆகியவை, சிறுநீரகத்தை பாதிக்கும் என்பதால், இதுபோன்ற நிலைகளில், அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. சிறுநீரகத்தை திறந்து, அறுவை சிகிச்சை மேற்கொள்வது இல்லை. கல் இருக்கும் இடத்தில், உடலின் மேற்புறம், மின் அலைகள் உருவாக்கப்படுகிறது. இந்த அதிர்வலைகள், கல்லைத் தாக்கி, அதை உடைக்கின்றன. பொடியான கற்கள், சிறுநீர் வழியே வெளியேறி விடும். சிறுநீர் பாதையை கல் அடைத்து கொண்டால், செயற்கை குழாய் பொருத்தி கல்லை அகற்றலாம். வேறு சிகிச்சை முறைகளும் உள்ளன. இந்த உபாதை, 21ம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கருத வேண்டாம். 7,000 ஆண்டுக்கு முன்னால் இறந்த மனிதர்களிடமும் இது காணப்பட்டது. தற்போது சிறு வயதினர், குறிப்பாக குழந்தைகளிடம் இந்த உபாதை காணப்படுகிறது. சீனாவில், பால் பவுடரில் உள்ள மெலாமைன் என்ற பொருளால், குழந்தைகளுக்கு சிறுநீரகக் கல் உருவாவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மற்ற நாடுகளில், குழந்தைகள் அதிக உடல் எடையுடன் இருப்பது, உடல் பயிற்சி இல்லாமல் இருப்பது, காற்றூட்டப்பட்ட குளிர்பானங்களை குடிப்பது போன்ற காரணங்களால், கல் உருவாகிறது. சிறுநீரகக் கல் உருவாவதை தடுக்க இயற்கை வழிமுறைகள் உள்ளன. * பச்சை டீ அல்லது பால் கலக்காத டீ குடிப்பது நல்ல பலனைத் தரும். அதில் உள்ள ஆன்டியாக்சிடன்ட் தன்மை, சிறுநீரகத்தில் தொற்று ஏற்படாமல் தடுக்கும். சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கும். * சாத்துக்குடி, எலுமிச்சை சாறு குடிப்பது நல்லது. அவற்றில் உள்ள அமிலம், சிறுநீரில் கலப்பதால், கல் உருவாகும் வாய்ப்பைத் தடுக்கிறது. * வாழைத் தண்டு சாப்பிடுவது, அதன் சாறை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை குடிப்பது ஆகியவை நல்ல பலனைத் தரும். * தினமும் இரண்டரை முதல் மூன்று லிட்டர் தண்ணீர் பருகுவது மிக மிக நல்லது. கூடவே, தினமும் உடற்பயிற்சியும் செய்ய வேண்டும். தூங்க செல்வதற்கு முன், ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்து விட்டு தூங்குவ துநல்லது. |
தீவிரவாத அமைப்பா இல்லையா?
பெண்கள் முன்னேற்றத்திற்கு சாய்பாபா சேவை அபரிமிதம்: ஜனாதிபதி
புட்டபர்த்தி : சாய்பாபாவின் 85வது பிறந்தநாள் விழாவையொட்டி, புட்டபர்த்தியில் நேற்று நடந்த பெண்கள் தின விழாவில், ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கலந்து கொண்டார். ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் பேசுகையில், "மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளன்று பெண்கள் தினத்துக்கு இங்கு ஏற்பாடு செய்திருப்பது மகிழ்ச்சிஅளிக்கிறது. பெண்களின் முன்னேற்றத்துக்காக சாய்பாபா ஆற்றி வரும் சேவை பாராட்டுக்குரியது.
இந்த சேவை, பெண்கள் சுயஅறிவும், சுயநம்பிக்கையும் பெறுவதற்கு உதவும்' என்றார். ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் பிரசாந்தி நிலைய நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். சாய்பாபா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 29வது பட்டமளிப்பு விழாவில், பிரதமர் மன்மோகன்சிங் இன்று கலந்து கொள்கிறார்.
பிரசாந்தி நிலைய நிகழ்ச்சிகளிலும் பிரதமர் கலந்து கொள்கிறார். சாய்பாபாவின் பிறந்த தினத்தைக் கொண்டாடும் விதமாக அவரது, பக்தர்கள் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், நாடுகளிலிருந்தும் புட்டபர்த்தியில் குவியத் தொடங்கிவிட்டனர். ஏராளமானோருக்கு இலவச திருமணத்துக்கும் ஏற்பாடாகியுள்ளது.
படத்தை கிளிக் செய்க!
யார் இந்த நிர்மோஹி அகரா? (Safron Terrorism)
அவுஜுபில்லாஹி மினஷ் ஷைத்தானிர்ரஜீம்
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
யார் இந்த நிர்மோஹி அகரா?
பாபர் மசூதி கட்டப்பட்ட இடத்தை சொந்தம் கொண்டாடும் சாதுக்களின் அமைப்பிற்கு பெயர்தான் நிர்மோகி அகரா. இவர்கள் ஹிந்து சமயத்தைச் சார்ந்த வைஷ்ணவ சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்கள் மேலும் அனுமாரின் தீவிர பக்தர்கள். மொத்தம் வடஇந்தியாவில் 14-அகரா பிரிவுகள் உள்ளன இந்த பிரிவுகளைத்தான் அகில இந்திய அகரா பரிஷத் (அகில் பாரதிய அகரா பரிஷத்) அங்கீகரித்துள்ளது
அகரா என்றால் என்ன?
அகரா என்ற சமஸ்கிருத வார்த்தையை அகதா என்றும் அழைப்பார்கள் அதாவது சாதுக்களின் பிரிவில் தற்காப்பு படையினர் என்று பொருள்படும். ஆதாரம் இதோ
ஹிந்து சமயத்தில் சாதுக்கள் என்றால் அமைதியானவர்கள் என்றும் புளு பூச்சியை கூட கொல்லமாட்டார்கள் என்றும்தான் நாம் அறிவோம் ஆனால் அதே சாதுக்களின் அமைப்பில் தற்காப்புக்காக கொலை செய்வதும் உண்டு என்பது இந்த அகரா என்ற அமைப்பின் மூலம் தெரியவருகிறது! இந்த சாதுக்களின் அமைப்பில் மிக முக்கிய பிரிவான அகரா என்ற சாதுக்கள் அமைப்பு தந்திரமான அமைப்பாகும் அதாவது இவர்கள் சாதுக்கள் போல் காட்சியளித்தாலும் தாங்கள் கொண்ட கொள்கைக்காக எதிரணியில் இருப்பவர்களுடன் போர் தந்திரத்தாலும், குஷ்டி மோதல்களாலும் சண்டையிட்டு தாங்கள் மட்டும் வெற்றி பெறுவதாகும் இதன் மூலம் சாதுக்கள் அசுர குணம் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது பாபர் மசூதியின் பிரச்சினையில் உண்மையாகிறது. அகரா எனப்படும் இவர்களை சாதுக்கள் என்று கூறுவதைவிட அசுர வர்க்கத்தினர் என்று கூறுவதுதான் சிறந்ததாகும் எனவே இந்திய ஒற்றுமையை சீர்குலைக்க அரங்கேற்றிய கூத்துக்களை இங்கு முன்வைக்கிறோம்!
அகரா பிரிவின் வரலாறு
இந்து சமயத்தில் அகரா என்ற பிரிவு கி.மு 2500ம் ஆண்டு வாக்கில் ஆதி சங்கராச்சாரியாரால் தோற்றுவிக்கப்பட்டது என்று பரவலாக நம்பப்படுகிறது. இவர்களின் வரலாறுபடி இந்த ஆதி சங்கராச்சாரியார் 7 அகாரா பிரிவினரை தோற்றுவித்தவராகிறார் இவைகளின் பெயர்களாவான!
1. மஹாநிர்வானி
2. நிரஞ்சனி
3. ஜுனா
4. அடல்
5. அவஹன்
6. அக்னி
7. அனந்த் அகரா
இந்த 7 அகரா பிரிவினர் பிற்காலத்தில் பல்கிப் பெருகி 14 பிரிவினராக மாறின இவைகளில் உள்ள பாபர் மசூதியை இடிக்க துணை நின்று பெயர் சம்பாதித்த ஒரு பிரிவுதான் நிர்மோகி அகரா!
சில அகாரா யோகிகள் தங்கள் அமைப்பை ஆதி சங்கராச்சாரியார் தோற்றுவிக்கவில்லை என்றும் தங்கள் மத குருவான கோரக்நாத் என்ற முனிவர்தான் தோற்றுவித்தார் என்று கூறுகின்றனர்.
அகரா பிரிவுகளின் பலம் மற்றும் பலவீனம்
கைகளில் வாள் ஏந்தும் நிர்வாண அகராக்கள் (சாது அசுரர்கள்)
மஹாநிர்வாணி, நிரஞ்சனி, ஜுனா ஆகிய அகரா சாதுக்களின் பிரிவுகள் மிகவும் பலமானதாகும். எனவே மற்ற பிரிவுகள் இந்த பலமான பிரிவுகளுடன் சமரசமாயின அவைகளாவன
- அடல் அகரா என்ற பலவீனமான பிரிவு மஹாநிர்வாணி என்ற பலமான பிரிவுடன் கூட்டு சேர்ந்தது!
- அனந்த அகரா என்ற பலவீனமான பிரிவு நிரஞ்சனி என்ற பலமான பிரிவுடன் கூட்டு சேர்ந்தது
- அவஹன் என்ற பலவீனமான பிரிவு ஜுனா என்ற பலமான பிரிவுடன் கூட்டு சேர்ந்தது!
இந்த பலவீனமான பிரிவுகள் பலமான அகராவுடன் இணைந்தாலும் சிற்சில நேரங்களில் தங்களுடைய எண்ணங்கள், வெற்றி தோல்விகள், தங்கள் குருதேவ் ஆகிய விஷயங்களில் வேறுபாடு கண்டு பொறாமை மனப்பாண்மையினால் உயர்வுதாழ்வு கொள்ளும்
அகராக்களின் வழிபாட்டு முறைகள்
அகராக்கள் பல்வேறு பிரிவினராக இருப்பதுடன் தங்கள் இஷ்ட தெய்வங்களின் முறைப்படியும் சண்டையிட்டு பிரிந்துவிடுவார்கள்
கடவுள் வழிபாட்டு முறையில் வேறுபாடு | |
சிவ அகராக்கள் | சிவனை வழிபடுபவர்கள் |
கல்பவஸிஷ் அகராக்கள் | பிரம்மாவை வழிபடுபவர்கள் |
வைராகி அகராக்கள் | விஷ்ணுவை வழிபடுபவர்கள் |
கடவுளுக்கு தவம் இருப்பதில் வேறுபாடு
ஒரு அகரா பிரிவு 8 வகை தவங்களை மேற்கொள்ளும் அந்த 8 தவங்களுக்கும் 52 வகையான மர்ஹிஸ்கள் (MARHIS நடுவன்) உள்ளது. ஒவ்வொரு மர்ஹிசும் மஹந்த் என்பவரால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த நிர்வாகத்திற்கு தலைமை வகிப்பவர் ஸ்ரீ பஞ்ச் (பஞ்ச் என்ற ஐந்து தலைவர்கள் – பஞ்சாயத்து தலைவர் போன்று). இந்த ஸ்ரீ பஞ்ச் என்ற தலைவர்கள் முறையே பிரம்மா, விஷ்ணு, சிவா, சக்தி, கணேசா ஆகிய கடவுள்களை பின்பற்று பவர்களாவர். இந்த ஸ்ரீபஞ்ச் என்ற 5 தலைவர்களையும் கும்ப மேளா என்ற விழாவின் போது தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
கும்ப மேளா என்பது என்ன?
கும்பா என்பது சமஸ்கிருத வார்த்தையாகும் இதற்கு PITCHER என்று ஆங்கிலத்தில் அழைப்பர் அதாவது கலசம் என்று கூறப்படும் கைப்பிடி இல்லாத மண் பானையாகும். அதாவது கும்ப ராசிக்காக காட்டப்படும் ஒரு வகை பானை. மேளா என்பது சந்திப்பு, கூட்டம் கூடுதல், சந்தை என்று பல்வேறு பெயர்களால் அழைப்பார்கள்.
இந்த கும்ப மேளாவின் ஆரம்பத்தை பற்றி கி.பி. 602-664ன் இடைப்பட்ட காலத்தின்படி இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்ட சீன துறவி (Huan Tsang or Xuanzang)யின் குறிப்பு படி ஹர்ஷவர்த்தனர் என்ற மன்னர்தான் இதை ஆரம்பித்தார் என்று எழுதப்பட்டுள்ளது. ஆனால் இன்றைய யோகி முனிபர்கள் இதை மறுக்கின்றனர்.
கும்ப மோளாவில் என்ற நடைபெறுகிறது
இங்குதான் அகரா பிரிவுகள் சங்கமிக்கிறார்கள். நிவாணமாக நடனமாடுகிறார்கள், நிர்வாணமாக வழிபடுகிறார்கள், ஒட்டுத்துணி கூட இல்லாமல் நிர்வாணமாக குஷ்டி மோதல்களில் ஈடுபட்டு தங்கள் திறமைகளை அகரா சாதுக்களின் தலைவர்கள் முன் காட்டுகிறார்கள். இறுதியாக நிர்வாணமாக அனைவரும் ஆற்றில் குளிக்கிறார்கள்.
இதோ இவர்கள்தான் நிர்மோஹி அகரா!
நீங்கள் மேலே கண்ட அகரா பிரிவுகளில் நிர்மோஹி அகராவும் ஒன்றாகும் இது பிற்காலத்தில் தோன்றிய 14 பிரிவுகளில் இந்த நிர்மோஹி அகரா என்ற பிரிவை அகில இந்திய அகரா பரிஷத் (அகில் பாரதிய அகரா பரிஷத்) அங்கீகரித்தது!
நிர்மோஹி அகராவின் நோக்கமும் உண்மை நிலையும்!
இந்த அமைப்பு வைஷ்ணவ சம்பிரதாய முறைப்படி தோற்றுவிக்கப்பட்டது. இவர்களின் கடவுள் ஹனுமான் அதாவது ராமாயணம் என்ற இதிகாச கற்பனைக் கதையின் கதாநாயகனான ராமனுடை சேவகன் ஹனுமான்! இந்த அமைப்பின் தலைவர் மஹந்த் பாஸ்கர தாஸ் என்பவராவார். இந்த அமைப்பினுடைய பெயரான நிர்மோஹி அகார என்பதற்கு ஒரு பொருள் உள்ளது அதாவது யாருடனும் ஒன்றிப்போகாத குழு. (NIRMOHI AKHARA meansGROUP WITHOUT ATTACHMENT) இதன் தலையயை கோட்பாடு யாருடனும் ஒத்துப்போகாமல் வாழ்வதே!
நிர்மோஹி அகராவின் ஆரம்பகால சதியும் தோல்வியும்!
இந்த நிர்மோஹி அகரா அமைப்பு 1949ம் ஆண்டுதான் பாபர் மசூதியுடன் தொடர்புடையது என்று அனைவராலும் பேசப்படுகிறது ஆனால் அது முற்றிலும் தவறான கருத்தாகும் இந்த அமைப்பு ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்திலேயே இனக்கலவரத்தை தூண்டும் விதமாக செயல்பட்டு 1885ல் பாபர் மசூதியின் இடத்தை சொந்தம் கொண்டாடியது!
அடிமை இந்தியாவின் ஆங்கிலேய அரசாங்கத்தின் நீதிமன்றத்தில் 1885ம் ஆண்டு ஃபைசாபாத் (FAIZABAD) ஒரு சூட் பைல் (நீதி மன்ற வழக்கு) ஒன்றை தாக்கல் செய்தது அந்த வழக்கில் இவர்கள் முன்வைத்த வாதம் இதோ ”அயோத்தி என்ற பகுதியில் ராமர் (ராம் சபுத்ரா) கோவில் இருந்ததாகும் இது பாபர் மசூதிக்கு மிக அருகாமையில் இருந்ததாகும் கூறப்பட்டிருந்தாக அறியப்படுகிறது. ஆனால் அன்றைய ஃபைசாபாத் நீதிமன்ற நீதிபதிகள் இந்த பிரச்சினையை வளர்க்கவிடாமலும் பிரச்சினை நீடித்தால் இனக்கலவரம் ஏற்பட்டு சமுதாயம் பிரச்சினைக்கு ஆளாக நேரிடும் என்றும் கருதி ஆங்கில ஏகாதிபத்திய அரசாங்கம் இந்த மனுவை தள்ளுபடி செய்தது! மேலும் கோவிலை கட்ட இந்த யோகி அமைப்பு முறையிட்ட பரிந்துரையின் மீதும் தடை விதிக்கப்பட்டது. இது நிர்மோஹி அகரா என்ற இந்த இந்துத்துவா அமைப்பின் மீது விழுந்த முதல் அடியாகும்! இந்த பலமான இடியை தாங்கிக்கொள்ள இயலாத இந்த அமைப்பு 64 ஆண்டுகாலமாக பொங்கிக்கொண்டே இருந்தது! பின்னர் 1949ல் சுதந்திர இந்தியாவில் மீண்டும் தன் பழைய கதையை தொடர்ந்து வழக்கு தொடர்ந்தது! இந்த நேரத்தில் இவர்கள் முன்வைத்த வாதம் பாபர் மசூதி அந்த பகுதியில் இல்லை என்பதே!
இறுதியாக இந்த நிர்மோஹி அமைப்பு 1989ல் உத்திரப்பிரதேச அரசாங்கத்தின் மீதே லாசூட் (LAWSUIT) என்ற வழக்கை தொடர்ந்தது. அதன்படி இவர்கள் நீதிமன்றத்தை அணுகி பாபர் மசூதியின் இடத்தை தங்களுக்கு வழங்கி ராமரை வழிபட வழிவகை செய்வதேயாகும். இந்த வழக்கு உத்திரப் பிரதேச அரசாங்கத்தின் மீது தொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இதன் பிறகு நடைபெற்றவை படங்களாக உங்கள் முன் இதோ
இப்போது நிர்மோஹி அகரா அமைப்பு தீவிரவாத அமைப்பா இல்லையா?
மாற்றுமத சகோதரர்களின் பார்வைக்கு இந்த கட்டுரையை சமர்பிக்கிறோம்!
யாரோ ஒருவன் ஆப்கானிஸ்தானி்ல் குண்டு வைத்தால் ஒட்டுமொத்த முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்று பச்சை குத்துகிறீர்களே இன்று இந்த நிர்மோஹி அகரா என்பவர்கள் யார்? இவர்கள் காவி தீவிரவாதிகள் இல்லையா? முடிவு உங்கள் (மாற்றுமதத்தவர்கள்) கையில்!
அல்லாஹ் கூறுகிறான்: ‘இறைநம்பிக்கை கொண்டவர்களே! பொறுமையை மேற்கொள்ளுங்கள். (எதிரிகளை விஞ்சும் வகையில்) பொறுமையில் நிலைத்திருங்கள். (சத்தியத்திற்காகத் தொண்டு செய்திட) எப்பொழுதும் ஒருங்கிணைந்து முனைப்புடன் இருங்கள்” (அருள்மறை குர்ஆன் 3:200)
‘பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்.திண்ணமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்’ (அருள்மறை குர்ஆன் 2:153)
புகழ் அனைத்தும் அகிலங்களின் அதிபதியான அல்லாஹ்வுக்கே!