படிப்பதற்கு நன்றி

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்


கொடிக்கு சல்யுட் அடிக்கலாமா?

இஸ்லாம் தெளிவாக கடவுள் கொள்கையை எடுத்துச் சொல்லக்கூடிய மார்க்கம் மட்டுமில்லாமல் அந்த கொள்கையின் அடிப்படையில் மக்கள் நடக்க வேண்டும் என்று வலியுறுத்தவும்  செய்கிறது.
எந்த பொருளுக்கும் அதன் உண்மையான சக்தியை தவிர வேறு எந்த
சக்தியும் இல்லை என்று இஸ்லாம் சொல்கிறது.
மனிதனுக்கு எந்த சக்தி இருக்கிறதோ அந்த சக்தியை தவிர வேறு சக்தி அவனுக்கு இல்லை.
அவன் எந்த வகையிலும் பிற மனிதனை விட சக்தியில் மிகைத்தவன் அல்ல.
ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்காக எழுந்து நிற்பது கூடாது.
அவனுக்கு தலை வணங்கக் கூடாது.
அவனுக்கு பணியக்கூடாது.
அவன் என்னிலையிலும் பணிந்து நிற்கக்கூடாது என்று  இஸ்லாம் சொல்கிறது. இதை அனைவரும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் இன்று சிலர் ஏதோ இஸ்லாமிய ஆட்சியை நிலை நிறுத்தப் போகிறோம் என்று சொல்பவர்கள் நாம் நாட்டின் கொடியை ஏற்றி வைத்துக் கொண்டு அதற்காக சல்யுட் அதாவது மற்றொரு பாஷையில் சொல்ல வேண்டும் என்றால் வணக்கம் என்று சொல்ல வேண்டும்.
இவர்கள் கொடிக்காக மற்றும் செய்யவில்லை. அவர்களின் படை??? தளபதி??,?க்கும் இது போன்று செய்கிறார்கள். இது இஸ்லாமிய கொள்கைக்கு எதிரானதாகும். இந்த செயலை ஒரு உண்மையான 
முஸ்லிம் செய்யமாட்டான்.
சிலர் கேட்கலாம் இந்தியாவின் மீது முஸ்
லிம்கள் பற்றுகுறைந்தவர்கள் என்று மாற்றார்கள் நம்மை எண்ணக்கூடாது என்பதற்காகத்தான் செய்கிறோம் என்று சொல்வார்கள்.
இவர்களிடத்தில் நான் ஒரு கேள்வியை கேட்கிறறேன். வந்தே மாதரம் என்ற பாடலை ஏன் பாடக்கூடாது?.இணைவைப்பு செய்திகள் அதில் இருப்பதினாலே தானே எதிர்க்கிறோம். எதிர்த்தோம். அது போன்றுதான் கொடிக்கு வணக்கம் செய்வதும் இணைவைப்புக் காரியம்தான்.
நாம் நாட்டின் ராணுவ வீரர்கள் கொடிக்கு மரியாதை செய்யலாம் என்றால் அது நிர்பந்தம் என்ற அடிப்படையில் அவர்களுக்கு தவறு இல்லை. ஆனால் பாரடைஸ் நடத்துபவர்களுக்கு எந்த நிர்பந்தமும் இல்லை
என்பதை விளங்க வேண்டும்..
அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே...... எனது இந்த ஆய்வில் குறைகள் இருக்குமானால் அது மனிதன் என்ற முறையில் என்னை சார்ந்தது.சுட்டிக்கடினால் திருத்திகொள்வேன். நிறைகள் இருக்குமானால் அண்ட அகிலங்களை எல்லாம் படைத்துப் பரிபாலிக்கும் ஏக இறைவனைச் சார்ந்தது .அவனுக்கே புகழ் அனைத்தும் . pudumadamonlinenet@yahoo.com

திருக்குர்ஆனை விரும்பிய மொழியில் படிக்க