படிப்பதற்கு நன்றி

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

                        27-1-2010 மாலை மலர்
                                                                                                                                                                                              பாபர் மசூதி வழக்கு தீர்ப்பை கண்டித்து தவ்ஹீத் ஜமாஅத் கண்டன ஆர்ப்பாட்டம்; ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு:
சென்னை, ஜன. 27-
பாபர் மசூதி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் சென்னையில் இன்று கண்டன
ஆர்ப்பாட்டம் நடத்தினர். மெமோரியல் ஹால் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் அப்துல்ஹமீது தலைமை தாங்கினார்.
நிறுவனத் தலைவர் ஜைனுல் ஆபிதீன் சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில் பாபர் மசூதி இடம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில் அலகாபாத் ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பு சட்டத்துக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு என்று ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயம் கருதுகிறது.
எனவே உச்சநீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி இந்த தீர்ப்பை மறுபரிசீலனைக்கு தானாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார். மாநில துணைத் தலைவர் ரகமத்துல்லா உள்பட ஏராளமான பிரமுகர்களும் பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்களும் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் குடும்பத்துடன் பஸ்-வேன்களில் வந்திருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இவர்கள் ஐகோர்ட்டை நோக்கி முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்ததால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு போக்குவரத்தை திருப்பி விட்டனர்.
27-1-2010 மாலை மலர்
அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே...... எனது இந்த ஆய்வில் குறைகள் இருக்குமானால் அது மனிதன் என்ற முறையில் என்னை சார்ந்தது.சுட்டிக்கடினால் திருத்திகொள்வேன். நிறைகள் இருக்குமானால் அண்ட அகிலங்களை எல்லாம் படைத்துப் பரிபாலிக்கும் ஏக இறைவனைச் சார்ந்தது .அவனுக்கே புகழ் அனைத்தும் . pudumadamonlinenet@yahoo.com

திருக்குர்ஆனை விரும்பிய மொழியில் படிக்க