தயிர் இட்லி

தேவையானவை: இட்லி 6, தயிர் 2 கப், கடுகு அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு 1
டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 2 (இரண்டாகக் கிள்ளியது), பெருங்காயம் 1 சிட்டிகை, கறிவேப்பிலை 1 ஆர்க்கு, கேரட் 1, மல்லித்தழை (பொடியாக நறுக்கியது) 4 டீஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப, எண்ணெய் 3 டீஸ்பூன்.
செய்முறை: தயிரை, தண்ணீர் சேர்க்காமல் கடைந்து கொள்ளவும். அதில் உப்பு, மல்லித்தழை சேர்க்கவும். இட்லியை சிறு சதுரத் துண்டுகளாக நறுக்கவும். அதை தயிரில் ஊறவைக்கவும். பின்னர் வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், காய்ந்த மிளகாய் தாளித்து தயிர் இட்லியில் விட்டு கலக்கிவிடவும். கேரட்டைத் துருவி மேலே தூவி, மல்லித்தழையையும் தூவி அலங்கரிக்கவும். இட்லி மிஞ்சினால் இனி கவலைப்பட வேண்டாம். தயிர் இட்லி ஆக்கிவிடுங்கள். பஞ்சாகப் பறந்துவிடும்.
na 30