படிப்பதற்கு நன்றி

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

PIWA (TMMK, PFI) மறுமையில் வென்றிடுவோம் !!!
ஏக இறைவனின் திருப்பெயரால்.....

அன்பார்ந்த சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

இன்றைய காலகட்டங்களில் பல  அமைப்புகள் தோன்றி இஸ்லாத்திற்கு சம்மந்தம்
இல்லாத பல கொள்கைகளை, கருத்துகளை சொல்லி  வருகிறது. இதில் அதிகமதிகம்
பாதிக்கப்படுவது இளைஞர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதன்
தொடர்ச்சியாக உள்ள ஒரு உள்ளூர் அமைப்புதான் PIWA . இவர்கள் எடுத்துவைத்த
முதல் படி சமுதாயம் (புதுமடம்) ஒன்றுசேர்க்கப்பட வேண்டும், ஊருக்காக
நல்லது செய்ய வேண்டும்...



இதைதான் இஸ்லாம் முதலில் விரும்புகிறதா என்று பார்த்தால் நிச்சயமாக
இல்லை. நாம் ஒரு அமைப்போ சங்கமோ ஏற்படுத்தினால் மறுமையில் வெற்றிபெற
வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தான் ஆரம்பிக்கப்படுகின்றன. இதில் மறுப்பு
ஏதும் இல்லை. ஆனால் மறுமையில் ஒரு அமைப்போ , கூட்டமோ வெற்றிபெற
வேண்டுமென்றால் அல்லாஹ் இவர்கள் ஆரம்பித்த வழியே சொல்லாமல் வேறொரு வழியே
சொல்கிறான்..

"நன்மையே ஏவி தீமையே தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம்
உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றிபெற்றோர்."

(அல்குர்ஆன் - 3 : 104)


மேற்கண்ட வசனத்தில் ஒரு சமுதாயம் வெற்றிபெற வேண்டுமென்றால் அந்த கூட்டம்
நன்மையே ஏவ வேண்டும் அதே சமயத்தில் தீமையே தடுக்க வேண்டும் என அல்லாஹ்
கூறுகிறான்...

இந்த வசனத்தை எடுத்துக்கொண்டு எந்த அமைப்பு செயல்படுகிறது என்றால் அதாவது
எந்த அமைப்பு நன்மையே ஏவி தீமையே தடுத்துக்கொண்டிருக்கின்றது என
பார்த்தால் PIWA (TMMK, PFI) கண்டிப்பாக செய்யவில்லை...

இவர்கள் என்ன நன்மையே ஏவினார்கள் ?

தொழச்சொல்கிறார்கள் ஆனால் எப்படி தொழவேண்டும் என கேட்டால் என்ன பதில்
இவர்களிடம் வரும்? ஏனென்றால் இவர்களே நபிவழியல்லாமல் ஆளுக்கொருவாறு
தொழுகிறார்கள் பின்னர் எப்படி இவ்வாறு தான் தொழவேண்டும் என சொல்ல
முடியும் ???
(இதுதான் போலி ஒற்றுமை)....


அடுத்து மேற்க்கண்ட அமைப்புகளெல்லாம் என்ன தீமையே தடுத்து விட்டார்கள்
நமது ஊரில் மாபெரும் அநியாயமான ஒரு உண்மையான முஸ்லிம் சகித்துக்கொள்ள
முடியாத ஒரு விஷயமான இணைவைப்பை (தர்ஹா, மவ்லிது)
செய்து கொண்டிருக்கிறார்கள் இவர்கள் இதை பகிரங்கமாக தடுத்தார்களா ? இல்லை !!!

மேற்கண்ட வசனத்தில் சொன்ன விஷயங்களை இவர்கள் கையில் எடுக்காத போது அதாவது
மறுமையில் வெற்றிபெற நினைக்காதபோது இவர்களுடன் சேர்ந்து பணியாற்றி என்ன
பயன் ?

அல்லாஹ்வின் அருளுக்காக இதில் நீங்கள் இருந்தீர்கள் என்றால் இதில் எந்ந
பயனும் நிச்சயமாக இல்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்!!!

அப்பரம் TNTJயே நோக்கி ஒரு கேள்வி எழுப்புவார்கள் !!!

நீங்கள் எத்தனை முறை மவ்லீது ஓதும் போது தடுத்தீர்கள ?

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒரு தவறு நடந்தால் அதை மூன்று அளவுகோல்
வைத்து அதை தடுக்க சொன்னார்கள் அவை
1. கையால் தடுத்தல் அது இயலாவிட்டால்
2. வாயால் தடுத்தல் அதுவும் இயலா விட்டால்
3. தவறுஎன மனதால் நினைத்து ஒதுங்கி கொள்ளுதல்... இது தான் ஈமானின் கடைசி
நிலையாகும்...

இந்த விஷயத்தில் நாம் (TNTJ) முதல் அளவு கோலில் சக்தி பெறவில்லை .
ஏனென்றால் நம் ஆதிக்கத்தின் கீழ் அந்த மவ்லிது ஓதப்படும் இடங்கள் நமது
ஆதிக்கத்தில் இல்லை. மேலும் எதிர்கும் விதமாகவும் தங்களை தாக்கும்
விதமாகவும் அமைந்திருக்கிறது. எனவே நாம் முதல் நிலையே அடைய சக்தி
பெறவில்லை.

ஆனால் இரண்டாம் நிலையான வாயால் தடுக்கிற நிலையை அடைந்திருக்கிற
காரணத்தினால் துண்டு பிரச்சாரங்கள், தெருமுனைக்கூட்டங்கள்,
பொதுக்கூட்டங்கள போன்றவற்றின் மூலம் அல்லாஹ்வின் அருளால்
தடுத்துக்கொண்டிருக்கின்றோம் !!



இந்த கட்டுரையை ஒன்றுக்கு பல முறை படித்து நடுநிலையோடு சிந்தித்து
மறுமையில் வெற்றிபெற்றிட முயற்ச்சி செய்யுங்கள் !!!
அல்லாஹ் அருள்புரிவானாக !!
புதுமடம் முஸ்லிம்...
 நன்றி.
அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே...... எனது இந்த ஆய்வில் குறைகள் இருக்குமானால் அது மனிதன் என்ற முறையில் என்னை சார்ந்தது.சுட்டிக்கடினால் திருத்திகொள்வேன். நிறைகள் இருக்குமானால் அண்ட அகிலங்களை எல்லாம் படைத்துப் பரிபாலிக்கும் ஏக இறைவனைச் சார்ந்தது .அவனுக்கே புகழ் அனைத்தும் . pudumadamonlinenet@yahoo.com

திருக்குர்ஆனை விரும்பிய மொழியில் படிக்க