படிப்பதற்கு நன்றி

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
ஒசாமா கொல்லப்பட்டதாகக் படங்கள் போலியானவை!                          அல்குவைதா இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதாக் காட்டப்பட்ட படங்கள் போலியானவை என்று Agence France Press தமது சிறப்புக் கணினி மென்பொருள் மூலம் நிரூபித்துள்ளது.

2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி மத்திய கிழக்கு நாட்டைச் சேர்ந்த இணையத்தள பத்திரிகையில் பிரசுரமான படத்தைக் கொண்டு கணினியில் Photo shop மூலம் உருவாக்கப்பட்டுள்ளதாக AFP புகைப்படங்களுக்கான தலைமை ஆசிரியர் மெலடன் அன்டனோவ் தெரிவித்துள்ளார்.
எனினும் பின்லேடனின் பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தியதால் பின்லேடனைக் கொல்ல நேர்ந்த்தாக அறிவித்தனர். அத்துடன் கொல்லப்பட்டபின்னர் அவரது உடல் கைப்பற்றப்பட்டதாகவும் அறிவித்திருந்தனர்.







பின்லேடனின் உடலை இஸ்லாமிய முறைப்படி சடங்குகள் நடத்தப்பட்டு கடலில் வீசப்பட்டதாக அறிவித்தனர். உடலைக் கைப்பற்றி அமெரிக்க உடனடியாக கடலில் வீசியது குறித்து பல்வேறு அய்யங்கள் எழுப்பியுள்ளது. இறந்த்தாக காட்டப்பட்டுள்ள பின்லேடனின் படத்தில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதும் சந்தேகத்தை மேலும் உறுதியடைய செய்துள்ளது.

அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே...... எனது இந்த ஆய்வில் குறைகள் இருக்குமானால் அது மனிதன் என்ற முறையில் என்னை சார்ந்தது.சுட்டிக்கடினால் திருத்திகொள்வேன். நிறைகள் இருக்குமானால் அண்ட அகிலங்களை எல்லாம் படைத்துப் பரிபாலிக்கும் ஏக இறைவனைச் சார்ந்தது .அவனுக்கே புகழ் அனைத்தும் . pudumadamonlinenet@yahoo.com

திருக்குர்ஆனை விரும்பிய மொழியில் படிக்க