
இஸ்லாத்தை கொச்சைப்படுத்த நினைக்கும் பாசிச சிந்தனை கொண்டவர்கள் எல்லாத் துறைகளிலும் தடம் பதித்திருப்பது நாம் அறிந்ததே! அதிலும் சினிமாத் துறை என்ற பெயரில் நாளுக்கு நாள்
சமுதாய சீர் கேட்டை வளர்க்கும் சினிமாக்காரர்கள் தங்கள் பாசிச உணர்வை, இஸ்லாமிய எதிர்ப்பு கொள்கையை நிலை நாட்ட பல சந்தப்பங்களில் இஸ்லாமிய மார்க்கத்தைப் பற்றிய தவறான கருத்துக்களை சினிமாக்கள் மூலமாக சித்தரிக்கிறார்கள்.
சமுதாய சீர் கேட்டை வளர்க்கும் சினிமாக்காரர்கள் தங்கள் பாசிச உணர்வை, இஸ்லாமிய எதிர்ப்பு கொள்கையை நிலை நாட்ட பல சந்தப்பங்களில் இஸ்லாமிய மார்க்கத்தைப் பற்றிய தவறான கருத்துக்களை சினிமாக்கள் மூலமாக சித்தரிக்கிறார்கள்.
இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள்.
இஸ்லாமியர்கள் அன்பு, பாசம் போன்ற குணங்கள் அற்றவர்கள்.
கொலை வெறி பிடித்தவர்கள்.
கல்ல நோட்டு அடிப்பவர்கள்.
தேசத் துரோகிகள்.
மிருக வதை செய்பவர்கள் போன்ற தவறான கருத்துக்களை இவர்கள் அடிக்கடி இந்த சினிமாத் துறை மூலம் மக்கள் மனதில் பதிய வைக்க முனைகிறார்கள், முயற்சி எடுக்கிறார்கள்.
அன்மையில் இலங்கையில் இராஜ் என்ற சினிமாப் பாடகன் இஸ்லாமியப் பெண்களைக் தவறாக சி்த்தரித்து சினிமாப் பாடல் வெளியிட்டதையும் நாம் சுட்டிக் காட்டியதோடு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் அந்தப் பாடல் தொடர்பாக தனது கண்டனத்தையும் வெளியிட்டது.
விஜயகாந்த் போன்றவர்கள் தங்களின் சினிமாப் படங்கள் மூலமாக பல சந்தர்பங்களில் முஸ்லீம்களை தீவிரவாதியாக காட்டியதும் நாமறிந்த்தே.
அதே போல் பம்பாய் என்ற பெயரில் ஏற்கனவே மணிரத்தினம் என்ற ஒரு இயக்குனர் முழுமையாக முஸ்லீம்களை தீவிரவாதியாக காட்ட முனைந்த்தும் அதற்கு கிளம்பிய எதிர்பலையில் அவர் பல இடங்களில் தனது சுய கவுரவத்தை இழந்த்தும் வரலாற்று உண்மைகள்.
இப்படி காலத்திற்கு காலம் தாம் எடுக்கும் சினிமாக்கள் பல நாட்கள் ஓட வேண்டும் என்பதற்காக முஸ்லீம்களை வைத்துப் பிழைப்பு நடத்துவது இவர்களுக்கு பழகிப் போன கதையாகிவிட்டது.
அதன் தொடரில் தற்போது சினிமா இயக்குனர் பாலாவும் சேர்ந்துள்ளார். தாம் எடுக்கும் சினிமாவின் கருத்தை சொல்ல வருபவர்கள் அவர்கள் பாட்டிற்கு எதையாவது சொல்லிவிட்டுப் போனால் நாம் கண்டு கொள்ள மாட்டோம் சீர் கெட்டவர்கள் என்ன சொன்னால் என்ன என்று விட்டு விடலாம்.
ஆனால் இவர்கள் நம்மை சீண்டிப் பார்க்கும் போதுதான் அவர்களுக்கு நாம் பதிலடி கொடுக்க வேண்டியுள்ளது.
அவன் இவன் என்ற பெயரில் பாலா எடுத்திருக்கும் ஒரு சினிமாப் படத்தில் முஸ்லீம்களின் மார்க்கக் கடமையான குர்பானியை கிண்டல் செய்திருப்பது கண்டிக்கத் தக்கதாகும்.
கல்லத் தனமாக மாட்டு வியாபாரம் செய்யும் ஒருவனை காட்டிக் கொடுத்ததற்காக, வியாபாரம் செய்தவன் காட்டிக் கொடுத்தவனிடம் அவனைத் தண்டித்து கோபத்துடன் பேசும் போது, குர்பானியை கிண்டல் செய்வதைப் போல் அந்தக் காட்சியை படமாக்கியுள்ளார். அவன் இவன் பாலா.
ஏண்டா!, மாட்ட வெட்டி திங்கிறதுக்கே இந்த உருகு உருகிறே!, எங்கோ இருக்கிற ஒட்டகத்தை அவனுவ இங்க கொண்டாந்து வெட்டி திங்கிராங்கல்ல!. அது பேரென்னடா!. குருதானியா?. என்று அருகில் உள்ளவனிடம் கேட்கின்றான்.
அதற்கு அவன், குர்பானி அண்ணே!. என்று அவனுக்கு சொல்லி கொடுக்கின்றான்.
பின் அவனை போய் கேளு!, அவனைபோய் கேளு!! என்று கத்துகின்றான்.
தான் சொல்ல வரும் கருத்தை சொல்லிவிட்டு போவதை விட்டு விட்டு முஸ்லீம்களின் மார்க்கக் கடமைகளில் ஒன்றான குர்பானியை வேண்டுமென்றே இழுத்துக் பொட்டுள்ளார் பாலா.
பாலா படிக்க வேண்டிய பாடம்.
இஸ்லாமியர்கள் உயிர் வதை செய்பவர்கள், மிருக வதையில் ஈடுபடுபவர்கள் என்ற கருத்தை நிலை நிறுத்தத் தான் பாலாவின் இந்த முயற்சி நடந்துள்ளது.
ஆனால் பாலா நினைப்பது தவறு என்று புரிய வைக்கும் கடமை நமக்கும் உள்ளது. சினிமா என்ற சீர் கேட்டில் மூழ்கி மக்களை வழி கெடுத்துக் கொண்டிருக்கும் பாலா போன்றவர்கள் முஸ்லீம்களை வம்புக்கு இழுப்பதை விட்டுவிட்டு முஸ்லீம்களை கடமைகளில் உள்ள நியாயத்தை புரிந்து கொள்ள முன்வர வேண்டும்.
தங்களின் சினிமாக்களில் பாசிச சிந்தனையை விதைப்பதற்கு முஸ்லீம்களை சீண்டிப் பார்ப்பதை இனிமேலாவது விட்டு விட வேண்டும் .
http://onlinepj.com/bayan-video/iniya_markam/