படிப்பதற்கு நன்றி

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

                                     
பூமி பெரும் அதிர்ச்சியாக 
                       
ஜப்பானில் இன்று காலை பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பாரிய ஆழிப்பேரலையும் ஏற்பட்டுள்ளது. ஜப்பானின் வடக்குகிழக்கு பகுதியில் 7.9 ரிச்டர் பரிமாணத்தில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கத்தால் மியாகி கரையோரப் பிரதேசத்தில் 20 அடி உயரமான அலைகள் எழக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் டோக்கியோவில் இருந்து 250 கிலோ மீற்றருக்கு அப்பாலுள்ள இடத்தில் பூமியின் மேற்புறத்தில் இருந்து 20 மைல் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இதன் பின்னர் 6.9 ரிச்டர் பரிமாண நில அதிர்வும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக பல வீடுகளும், கட்டிடங்களும் மற்றும் வாகனங்களும் அடித்து செல்லப்பட்டுள்ளன. பல இடங்களில் தீப்பரவலும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த ஆழிப்பேரலையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை பல்லாயிரக்கணக்காக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதே வேளை ரஸ்யா மற்றும் தாய்வான் ஆகிய இடங்களுக்கும் ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
2:22அ(ந்த இறை)வனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்தினின்றும் மழை பொழியச்செய்து; அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான்; (இந்த உண்மைகளையெல்லாம்) நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள்.                                               
بسم الله الرحمن الرحيم
பூமி பெரும் அதிர்ச்சியாக - அதிர்ச்சி அடையும் போது இன்னும், பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும் போது- "அதற்கு என்ன நேர்ந்தது?" என்று மனிதன் கேட்கும் போது- அந்நாளில், அது தன் செய்திகளை அறிவிக்கும். (அவ்வாறு அறிவிக்குமாறு) உம்முடைய இறைவன் அதற்கு வஹீ மூலம் அறித்ததனால். அந்நாளில், மக்கள் தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டு, பல பிரிவினர்களாகப் பிரிந்து வருவார்கள். எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார்.  அன்றியும், எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான். 
               
அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே...... எனது இந்த ஆய்வில் குறைகள் இருக்குமானால் அது மனிதன் என்ற முறையில் என்னை சார்ந்தது.சுட்டிக்கடினால் திருத்திகொள்வேன். நிறைகள் இருக்குமானால் அண்ட அகிலங்களை எல்லாம் படைத்துப் பரிபாலிக்கும் ஏக இறைவனைச் சார்ந்தது .அவனுக்கே புகழ் அனைத்தும் . pudumadamonlinenet@yahoo.com

திருக்குர்ஆனை விரும்பிய மொழியில் படிக்க